அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 30) ஆளுநர் ரவியை சந்திக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று தனது கைப்பட எழுதிய கடிதத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை இன்று மதியம் 1 மணிக்கு விஜய் சந்திக்கிறார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்பட 10 பேர் சந்திக்க உள்ளனர்.
அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதன் முதலாக ஆளுநரை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு விசாரணை!
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… விஜய் கைப்பட எழுதிய கடிதம்!