தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தவெகவின் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
தவெக கொள்கை!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். மக்கள் யாவரும் பிறப்பால் சமம்.
மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்கின்ற தனி அடையாளங்களுக்குள் மனித சமுதாயத்தை சுருக்காமல் தமிழ்நாட்டின் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது தவெகவின் குறிக்கோளாகும்.
மதச்சார்பற்ற சமூகநீதிக்கொள்கைகள் நம்முடையது.
ஆட்சியதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகளைப் பறிக்கும் மாநில, ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது.
தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையை தமிழக வெற்றிக் கழகம் பின்பற்றப்படும்.
தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும்.
போதையில்லா தமிழகத்தை அமைக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…