தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக கடந்த 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் முறைப்படி அறிவித்தார். இதன் இரண்டாம் ஆண்டு விழா இன்று தொடங்கிய நிலையில், தற்போது கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவை விழாவில் காணவில்லை. tvk second anniversary adhav ar
பல்வேறு படி நிலை ஆலோசனைகள், அக்டோபர் 27 ஆம் தேதி மாநாடு, இதையெல்லாம் தாண்டி தற்போது கட்சியின் மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார் விஜய்.
இந்நிலையில் கட்சியின் பெயரை விஜய் வெளியிட்டு ஓராண்டு நிறைவுற்று, இரண்டாம் ஆண்டு தொடங்குவதை ஒட்டி இன்று (பிப்ரவரி 2) பனையூரில் தவெக அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றி வைத்தார் விஜய்.
இதன் பின் தங்களது கொள்கைத் தலைவர்களாக ஏற்கனவே அறிவித்த, வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார் விஜய்.

இந்த விழாவில் தவெகவில் புதிதாக இணைந்து தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி பெற்ற ஆதவ் அர்ஜுனாவை காணவில்லை.
கட்சியில் இணைந்து சில நாட்களே ஆன நிலையில் இதுபோன்ற முக்கிய நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொள்ளவில்லையா என்ற கேள்விகள் தவெகவுக்குள்ளேயே எழுந்துள்ளன.
இதுகுறித்து விசாரித்தபோது “ஆதவ் அர்ஜுனா இன்று உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ளார். அகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டிகள் உத்தரகான்டில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளராகவும், இந்திய கூடைப்பந்து சம்மேளத்தின் தலைவராகவும் இருக்கும் ஆதவ் அர்ஜூனா பங்கேற்றுள்ளார். அதனால் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் அவரால் நேரடியாக பங்கேற்க முடியவில்லை. இதுகுறித்து கட்சியின் தலைவர் விஜய்க்கும் அவர் தகவல் தெரிவித்துவிட்டார்” என்கிறார்கள் தவெக தலைமை நிலைய வட்டாரங்களில். tvk second anniversary adhav arjuna absent
களத்தில் இறங்கி அயராது உழைப்போம்! tvk second anniversary adhav arjuna absent
ஆதவ் அர்ஜுனா இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது.
மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, நூறாண்டுக் காலம் களமாடும் இயக்கமாக நமது வெற்றிக் கழகத்தை வீறுநடை போடச் செய்யும் வரலாற்றுப் பணி நம் முன் உள்ளது. அந்த இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.” என ஆதவ் தெரிவித்துள்ளார்.