தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்து கலந்துரையாடல் வருகிற 18ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ‘புஸ்ஸி’ ஆனந்த் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளரான ‘புஸ்ஸி’ ஆனந்த் மாநாட்டு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு பற்றி இன்று(அக்டோபர் 17) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நம் தலைவரின் அறிவுறுத்தல்படி, நமது முதல் மாநில மாநாடு குறித்து, மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் அக்டோபர் 18ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர்.
பொருள்:
1.இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை
2.கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை
3.சமூகப் பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது
4.வெற்றிக் கொள்கைத் திருவிழா – விளக்கவுரை
5.மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு
எனவே, இக்கலந்தாய்வில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழக, புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ‘புஸ்ஸி’ ஆனந்த் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சந்திரசூட் பரிந்துரைத்த அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
போராட்டம் வாபஸ் : இன்று பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்!
Bigg Boss : யானையை அடக்கனும்னா 10 பேர் வேணும்! – எவிக்சன் குறித்து ரவீந்தர் ரவுசு!