தமிழக வெற்றிக் கழகத்தில் சிறார் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அணி என 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இன்று (பிப்ரவரி 11) அறிவிக்கப்பட்டுள்ளன. children wing formed in tvk
தமிழக வெற்றிக் கழகம் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களாக மாவட்ட நிர்வாகிகளை நியமித்து 5 கட்டங்களாக அறிவித்தார். கடந்த 2 நாட்களாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பல புதிய பிரிவுகளை உருவாக்கி தவெக கட்சியின் 28 அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அணிகள் விவரம்! children wing formed in tvk
- தகவல் தொழில்நுட்பப் பிரிவு
- வழக்கறிஞர்கள் பிரிவு
- ஊடகப் பிரிவு
- பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு
- பயிற்சி மற்றும் பணியாளர் மேம்பாட்டுப் பிரிவு
- உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு
- காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு
- வரலாற்றுத் தரவு ஆராய்ச்சி மற்றும் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு
- திருநங்கைகள் பிரிவு
- மாணவர் பிரிவு
- மாற்றுத்திறனாளிகள் பிரிவு
- இளைஞர்கள் பிரிவு
- பெண்கள் பிரிவு
- இளம் பெண்கள் பிரிவு
- குழந்தைகள் பிரிவு
- தொண்டர்கள் பிரிவு
- வர்த்தகர்கள் பிரிவு
- மீனவர்கள் பிரிவு
- நெசவாளர்கள் பிரிவு
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரிவு
- தொழிலாளர்கள் பிரிவு
- தொழில்முனைவோர்கள் பிரிவு
- அயலக இந்தியர்கள் பிரிவு
- மருத்துவர்கள் பிரிவு
- விவசாயிகள் பிரிவு
- கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு
- தன்னார்வலர்கள் பிரிவு
- AITVMI – அகில இந்திய தளபதி விஜய் மக்கள்
இந்தியாவில் பொதுவாக 18வயது உட்பட்டவர்களை கட்சி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறார் அணி, குழந்தைகளின் நலன் காப்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.