தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகப்படுத்த உள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்.
எனினும் அக்கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை அறிமுகப்படுத்தப்படும் என விஜய் நேற்று அறிவித்தார்.
மேலும் கட்சியின் இசையமைப்பாளர் தமன் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட உள்ளார்.
இதனையடுத்து பனையூரில் கட்சி கொடி விழா அறிமுகப்படுத்தவதற்கான நிகழ்ச்சி இன்று காலை முதலே களைகட்டியுள்ளது. கட்சி நிர்வாகிகள் பலரும் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை கட்சி கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் லட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாம்பன் பாலம்: அக்டோபரில் பயணிகள் ரயில்!
சென்னை பல்கலைக்கழகம்: தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!