தவெக மாநாடு… 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம்!

அரசியல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இந்தநிலையில், மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 234 தொகுதிகளிலும் தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தவெக தலைவர் விஜய் ஆணைக்கிணங்க, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள மாநாட்டிற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கட்சி சார்பில், விஜய் ஒப்புதலோடு, மாநாட்டில் பங்கேற்கும் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெமிமா தந்தை மீதான மதப்பிரச்சார குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – மும்பை ஜிம்கானா தலைவர்

கோவை மாமன்ற கூட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் வாக்குவாதம்!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *