நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்ரவரி 19) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை ( 19.02.2024 ) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்பாரா என்பது குறித்து எந்தவிதமான தகவலும் அறிக்கையில் இடம்பெறவில்லை. அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும், ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்ட நிலையில், இன்று வெளியான கட்சியின் அறிக்கையிலும் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெர்லினில் ’கொட்டுக்காளி’ : சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சூரி
மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில் இயக்கம்!