தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை முதல் மாநில மாநாட்டில் இன்று (அக்டோபர் 27) ஏற்றி வைத்தார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தொடங்கியது.
மேடைக்கு அருகில் இருந்து திடீரென மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய், அதன் பிறகு சுமார் 800 மீட்டர் தூரம் கொண்ட நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.
அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை மாலை 4:25 மணிக்கு மேடையிலே இருக்கிற தானியங்கி பொத்தான் மூலமாக அழுத்தி ஏற்றி வைத்தார் விஜய்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் 4:30 மணி முதல் 6:00 மணி வரை என்ற நிலையில், ராகு காலம் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே மாநாட்டின் தொடக்கத்தை பிரகடனப்படுத்தும் வகையில்… கட்சியின் கொடி பாடல் ஒலிக்க கொடி ஏற்றினார் விஜய்.
அதுவரை கண்கலங்கி இருந்த விஜய் 100 அடி உயரத்தில் வெற்றிக் கழக கொடி பறந்ததும் மெல்லிதாக புன்னகை வெளியிட்டார்.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரேம்ப் வாக்கில் மாஸ் காட்டிய விஜய்… தொண்டர்கள் பொழிந்த துண்டு மழை!