தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதேபோல மேடையில் யார் யார் விஜய்யுடன் அமரப்போகிறார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் யாரேனும் கலந்துகொள்வார்களா என்று தவெக நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்…
மேடையில் எத்தனை பேர்!
விஜய்யின் முதல் அரசியல் மேடை என்பதால் தவெக மாநாட்டு மேடையில் விஜய்யோடு தோன்றுவதற்கு கட்சியில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைமை நிர்வாகிகள், அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் மேடையில் இருக்க வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.’
இதன் அடிப்படையில் போலீஸாரும் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். எத்தனை பேர் மேடையில் இருப்பார்கள் என போலீஸ் தரப்பில் கேட்க, ‘300 பேர் வரை இருப்போம்’ என்று சொல்லியுள்ளனர் கட்சித் தரப்பில்,
இதனால் அதிர்ந்து போன போலீஸார், ‘அவ்வளவு பேர் எல்லாம் மேடையில் ஏறினால் பாதுகாப்பு இருக்காது. நூறு பேருக்கும் குறைவானவர்களே மேடையில் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்!’
மாநாட்டு மேடையில் வேறு சில அரசியல் கட்சிகளில் இருந்து யாரேனும் விஜய் கட்சியில் சேருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சினிமா உலகத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்கள், நடிகைகள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆனால், விஜய் தரப்பில் யாரையும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கவில்லை என்கிறார்கள். தானாகவே முன் வந்து மாநாட்டில் சினிமா புள்ளிகள் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் தவெக வட்டாரத்தில்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் மாநாடு… தொகுதிக்கு எத்தனை பேர்? மொத்த டார்கெட் எவ்வளவு?
இந்திய ராணுவம் தீவிரவாதக்குழு – சீதாவாக நடிக்க சாய் பல்லவிக்கு கிளம்பிய எதிர்ப்பு!