தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் அனலைஸ் செய்து எஸ்.பி-க்கள் மூலம் காவல்துறை தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார்கள். அதன்படி, இரண்டு லட்சம் பேருக்கு மேல் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தவெக மாநாட்டில் கூட்டத்தையும் போக்குவரத்தையும் கட்டுப்படுத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் டிஎஸ்பி, எஸ்பி, டிஐஜி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அந்த மீட்டிங்கில் அவர் பேசும்போது, “இது ஒரு புதிய கட்சியின் புதிய மாநாடு. இந்த மாநாட்டுக்கு வரக்கூடியவர்கள், ஆர்கனைசேஷன் இல்லாமல் வருவார்கள். மற்ற கட்சியாக இருந்தால், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் சொன்னால் கட்டுப்படுவார்கள்.
புதிதாக வரக்கூடிய கூட்டம் இது. அதனால் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். தன்னிசையாக தான் செயல்படுவார்கள். அதனால், பாதுகாப்பில் ஈடுபடக்கூடிய அதிகாரிகளான நீங்கள் உங்களுக்கு எந்தெந்த பாயிண்ட்டில் டூட்டி போடப்பட்டுள்ளதோ, அங்கு உங்களுக்கு கீழ் பணியமர்த்தப்பட்டுள்ள போலீஸ், எஸ்.ஐ மற்றும் இன்ஸ்பெக்டர்களிடம் சரியான உத்தரவு கொடுத்து வழிநடத்த வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாநாட்டு மேடைக்கு பின்புறம், நடைமேடை மற்றும் மாநாடு வளாகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடலூர் எஸ்.பி ராஜாராம், காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகம், கோவை போக்குவரத்துதுறை துணை ஆணையர் அசோக் குமார், சேலம் துணை ஆணையர் கிரீஷ் யாதவ், திருவள்ளூர் எஸ்.பி சீனிவாச பெருமாள் ஆகியோர் தலைமையில் ஐந்து எஸ்.பி-க்கள் கண்காணிப்புக்காக ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து மற்றும் கார் பார்க்கிங் பகுதியை கவனிக்க ஐந்துக்கும் மேற்பட்ட எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ளியங்கிரி மலை ஏறனுமா? ரூ.5,353 கட்டணம்! – கொந்தளிக்கும் பாஜக
விஜய் மாநாடு… தொகுதிக்கு எத்தனை பேர்? மொத்த டார்கெட் எவ்வளவு?