விஜய் மாநாட்டில் செக்போஸ்ட்… தவெக நிர்வாகிகள் சொல்வது என்ன?

Published On:

| By Selvam

வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருப்பதால், தவெக நிர்வாகிகள் மிகுந்த ஆக்டிவாக சமூக வலைதளங்களில் நிறைய பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல, கட்சி நிர்வாகிகள் வாடகைக்கு வேன்கள் மற்றும் பஸ்களை புக் செய்வது, ஆட்களை திரட்டுவது என மிகவும் பிஸியாக முழு வீச்சில் வேலை செய்து வருகின்றனர். இந்த மாநாடு தொடர்பாக மின்னம்பலத்தில் நாம் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.

இந்தநிலையில், வி.சாலை பகுதியில் மாநாடு நடைபெறும் இடத்தில்  அரசுக்கு சொந்தமான தார்ச்சாலையில், பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி  செக்போஸ்ட் அமைத்துள்ளனர். இந்த செக்போஸ்டில் பவுன்சர்கள் காவலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த சாலை வழியாக தான் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் காடுகளுக்கு சென்று விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், விவசாயிகளையும் சாலையில் அனுமதிக்காததால், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தவல்கள் வருகின்றன.

இதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “மாநாட்டு பகுதியில் தற்போது வரை  15 ஆயிரம் லைட்டுகள், ஆயிரம் தற்காலிக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வொர்க் நடந்து வருவதால்,   பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவுன்சர்களை வைத்து செக்போஸ்ட் அமைத்துள்ளோம்” என்கிறார்கள்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? எந்தெந்த ரூட்டில் ஸ்பெஷல் பஸ்… முழு விவரம் இதோ!

பிக்பாசில் அர்னவ் அவுட்… இன்ஸ்டாவில் திவ்யா போடும் பதிவுகள் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share