ஆளுநர் பேசுவதை அவரது வீட்டிலேயே கேட்க மாட்டார்கள்: டிடிவி தினகரன்

அரசியல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்காத நிலையில், அவர் சனாதனத்தைப் பற்றிப் பேசத் தேவையில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மேம்படுத்தப்பட்ட அமமுக-வின் வலைத்தளத்தை இன்று (நவம்பர் 14) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமமுக-வின் வலைத்தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. Ammk.com மூலம் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதிமுக கட்சி இன்று செயல்படாத நிலையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அதிமுக பற்றி பேச எதுவும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து 2023 டிசம்பரில் முடிவு செய்யப்படும். அமமுக அணில் போல் செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம்” என்றார் தினகரன்.

தொடர்ந்து 6 பேர் விடுதலை மற்றும் ஆளுநர் குறித்தும் பேசினார்.

“உச்சநீதிமன்றம் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ததை வரவேற்கிறோம். நீண்ட நாட்களாக 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்தது தவறான நடவடிக்கை.

ஆட்டுக்குத் தாடி எப்படி தேவையில்லையோ நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை என்ற அண்ணாவின் கருத்துதான் எங்கள் கருத்து.

ஆளுநர் சனாதனத்தை பற்றிப் பேசத் தேவையில்லை. ஆளுநர் சொல்வதை அவர் வீட்டில் கூட கேட்க மாட்டார்கள்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தால் இப்படிதான் பேசுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. மேலும், தமிழ்நாட்டைப் பாதிக்கக்கூடிய விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார்.

மோனிஷா

மீரா மிதுனை பிடிக்க முடியவில்லை: லுக் அவுட் டுக்கு போலீஸ் தயார்!

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.