டிடிவி தினகரனை சந்திக்கிறார் பன்னீர்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 7 மணிக்கு டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக இருந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஈடுப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற திருச்சி மாநாட்டை தொடர்ந்து, இன்று இரவு 7 மணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பி.டி.ஆர் இலாகா பறிப்பு: நிதியமைச்சர் ஆகிறாரா தங்கம் தென்னரசு?
10 நாளில் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் 2