நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு கூட்டணிக்கான மூன்று வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது. பாஜக கூட்டணி, திமுக அல்லாத காங்கிரஸ் கூட்டணி அல்லது தனித்து போட்டியிடுவோம். திமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக தமிழக மக்கள் மனநிலை உள்ளது. அவர்களுக்கு மாற்றாக அமமுகவை ஆதரிப்பார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, விலைவாசி உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஓ.பன்னீர் செல்வம் எனது பழைய நண்பர். அவர் கோபத்தில் செயல்பட்டதால் சில பாதிப்புகள் ஏற்பட்டது. நண்பருடன் மீண்டும் இணைவது இயல்பானது தான். ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார். இருவரும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் செயல்படுவோம். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைப்பதை அமமுக தொண்டர்கள், நிர்வாகிகள் 90 சதவிகிதத்திற்கும் மேல் விருப்பமில்லாமல் உள்ளனர். பழனிசாமி திருந்துவாரா இல்லையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். மக்கள், தொண்டர்கள் அவரை திருத்துவார்கள். பன்னீர் செல்வம் எடப்பாடியுடன் இணைந்தால் கூட நாங்கள் அந்த முடிவை எடுக்க மாட்டோம். காவிரி விவகாரத்தில் கர்நாடகா வன்முறையை கையில் எடுப்பார்கள். தமிழகம் உரிமைக்காக சட்டரீதியான போராட்டத்தை மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஒன்பது மாதங்களில் 146 புலிகள் பலி: காரணம் என்ன?
காலையில் டீ, காபியுடன் பிஸ்கட் சாப்பிடலாமா?
குன்னூர் விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!