எடப்பாடி பழனிசாமி யாரோ ஒரு சிலரை காசு கொடுத்து வாங்கலாம், அனைவரையும் அவரால் காசு கொடுத்து வாங்கி விட முடியுமா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (பிப்ரவரி 24) மதுரை மாவட்டம் கோச்சடையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுக்குழு தீர்மானத்தைப் பற்றி நீதிபதிகள் எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. ஓபிஎஸ் சட்டப்போராட்டத்தை தொடருவார். எடப்பாடி பழனிசாமிக்கு அடி விழும்போது அனைத்து தொண்டர்களும் அவரை விட்டு வெளியே வந்து விடுவார்கள்.
எடப்பாடி துரோக சிந்தனை உள்ளவர். அதிமுகவில் உள்ளவர்கள் எல்லோரையும் நன்றாக வைத்திருப்பாரா. பழனிசாமியை அவர்கள் பொதுச்செயலாளராக அறிவித்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.
திமுக ஆட்சி அதிகாரத்துடன் கூட்டணி பலத்துடன் உள்ளது. அதனை வீழ்த்த வேண்டும் என்றால் பலமான கூட்டணி அமைய வேண்டும்.
பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தே அவரால் வெற்றி பெற முடியவில்லை. தினகரன் யார் என்பதை காலம் உணர்த்தும். பண பலத்தாலும் மூத்த நிர்வாகிகளை மட்டும் வைத்து விட்டு கட்சியை அவரால் வெற்றி பெற வைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி யாரோ ஒரு சிலரை காசு கொடுத்து வாங்கலாம், எல்லோரையும் அவரால் காசு கொடுத்து வாங்கி விட முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்வம்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் : விலகிநின்ற சோனியா, ராகுல்
மாதம் 1 கோடி வருமானம்… 11 வயதில் ஓய்வு பெறும் சிறுமி