டிடிவி தினகரன் பிறந்தநாள்: கூட்டணி வடிவம் பெறுமா வாழ்த்து?

Published On:

| By Selvam

அம்மா மக்கள் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

டிடிவி தினகரன் பிறந்தநாளை ஒட்டி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. நடிகர் விஜய் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டிடிவி தினகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நடிகர் விஜய், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தமிழ்நாடு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் D.கணேசன் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள்,  அமமுக தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி தலைமையிலான அதிமுக ஏற்கனவே பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில்… ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் பாஜக நட்பு பாராட்டி வருகிறது.  இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எனவே இந்த வாழ்த்து கூட்டணி வடிவம் பெறுமா என்ற பேச்சு அமமுக நிர்வாகிகளிடையே  எதிரொலிக்கிறது.

அதேநேரம் விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்க உள்ள நடிகர் விஜய் ஏற்கனவே திருமாவளவன், அன்புமணி, சீமான் உள்ளிட்டோருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில்… இன்று டிடிவி தினகரனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்வில்  மௌனமும் ஓர் அரசியல்தான்,  வெளிப்படுத்துதலும் ஓர் அரசியல்தான்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்ற தாக்குதல் : அடிபடும் பாஜக எம்.பி பெயர் – யார் இந்த பிரதாப் சிம்ஹா?

நாடாளுமன்ற தாக்குதல்: அரசியல் தலைவர்கள் ரியாக்‌ஷன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel