திமுக அரசு வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது, மூக்கணாங்கயிறு போல ஆளுநர் ஆர்.என்.ரவி இருப்பது தேவை தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை முடிக்காமல், 85 சதவிகிதம் முடித்துவிட்டோம் என்று திமுக அரசு மக்களிடம் பொய் சொல்வதற்கு பதிலாக பணியை முடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம். திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடாது.
ஒரு மதத்தை எதிர்த்து பேசுவதும், தாக்கி பேசுவதும் மதவாதம் தான். சிறுபான்மையின மதத்திற்கு ஆதரவாக இருப்பது வேறு, இந்து மதத்தை தாக்கி பேசுவது வேறு. மதவாதத்தை திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கைவிட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தமிழகத்தில் பேரணி நடத்தியுள்ளார்கள். பாஜகவிற்கு ஆதரவாக நான் பேசவில்லை. நீதிமன்றம் பேரணி நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைதியான முறையில் பேரணி நடத்த வேண்டும்.
திமுக அரசு வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது, மூக்கணாங்கயிறு போல ஆளுநர் ஆர்.என்.ரவி இருப்பது தேவை தான் என்று தோன்றுகிறது.
விவசாயிகளுக்கு மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாய இழப்பீட்டை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். பழனிச்சாமிக்கும் ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
இரண்டு பேருமே ஆட்சி கிடைத்தவுடன் ஆணவத்தின் உச்சத்தில் செயல்படுகின்றனர். அவர்களுடைய உடல்மொழியே வேறு மாதிரியாக உள்ளது. திமுக என்ற தீய சக்தியை வரும் காலத்தில் வீழ்த்துவதற்காக அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“நூற்றாண்டு கால போராட்டத்தில் பின்னடைவு”- 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து ஸ்டாலின்
10% இட ஒதுக்கீடு : ”அடிப்படை தரவு இன்றி வழங்கப்பட்ட தீர்ப்பு!” – பாமக வழக்கறிஞர் பாலு