நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு அன்றைக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்தேன். இன்றைக்கு தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து, விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்புகின்றோம்.
விஜயகாந்திற்கு மணி மண்டபம் வைப்பது குறித்து பிரேமலதா அரசை வலியுறுத்தியுள்ளார். அதனை ஏற்று கேப்டன் விஜயகாந்திற்கு பொது இடத்தில் அரசு செலவில் மணி மண்டபம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை நானும் வலியுறுத்துகிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன்படி உள் ஒதுக்கீடு செய்தால் தான் நியாயமாக இருக்கும். அதை அவசியம் தமிழ்நாடு அரசாங்கம் செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஐஜி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றது குறித்து, “உண்மையில் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்திருப்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். குருவியை சுடுவது போல 16 பேர் அன்றைக்கு சுட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள். அதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமே தவிர பதவி உயர்வு கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்க ஒரு விஷயம்” என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு “அதில் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். முழுமை அடைந்த பிறகு தான் உங்களிடம் சொல்வது சரியாக இருக்கும். கூட்டணி என்பது தேசிய கட்சியுடனும் இருக்கலாம். தனித்தும் போட்டியிடலாம். ஓபிஎஸும் நானும் இணைந்து அரசியலில் பயணிப்போம் என்று முடிவெடுத்துள்ளோம். பொறுத்திருந்து பாருங்கள் உங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கிறிஸ்துமஸ் தீவில் 2024 பிறந்தது!
புத்தாண்டு கொண்டாட்டம்: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்!