உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. தபால் மூலம் வாக்களிக்கலாம். மொத்தமாக 18.6 கோடி அமெரிக்கர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் 8.1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர்.கமலா ஹாரிஸ், இ-மெயில் மூலம் நேற்று முன் தினம் தனது வாக்கை செலுத்தினார்.
ப்ளோரிடா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது கமலா ஹாரில் 214 (6,23,65,314 வாக்குகள் (47.4%)) எலக்டோரல் வாக்குகளையும், டிரம்ப் 248 (6,73,92,019 வாக்குகள் (51.2%)) எலக்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
- டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள்!
அலபாமா
ஆர்கன்சாஸ்
ப்ளோரிடா
ஜார்ஜியா
ஐடாஹோ
இந்தியானா
அயோவா
கன்சாஸ்
கென்டக்கி
லூசியானா
மிசிசிப்பி
மிசூரி
மொன்டானா
நெப்ராஸ்கா
வட கரோலினா
வடக்கு டகோட்டா
ஓஹியோ
ஓக்லஹோமா
தென் கரோலினா
தெற்கு டகோட்டா
டென்னசி
டெக்சாஸ்
உட்டா
மேற்கு வர்ஜீனியா
வயோமிங் என 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
அரிசோனா, மிச்சிகன், மினசோட்டா, நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். - கமலா ஹாரிஸ் வெற்றி பெற்ற மாகாணங்கள்!
கலிபோர்னியா
கொலராடோ
டெலவேர்
கொலம்பியா மாவட்டம்
ஹவாய்
இல்லினாய்ஸ்
மேரிலாந்து
மாசசூசெட்ஸ்
நியூயார்க்
ஒரேகான்
ரோட் தீவு
வெர்மான்ட்
வர்ஜீனியா
வாஷிங்டன் என 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
கனெக்டிகட், மைனே, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ ஆகிய மாகாணங்களில் கமலா முன்னிலை வகிக்கிறார்.
அலாஸ்கா மாகாணத்தில் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
இன்னும் சற்று நேரத்தில் அனைத்து மாகாணங்களின் முடிவுகளும் வெளியாகவுள்ளது. தற்போதைய நிலவரப்படி டொனால்டு ட்ரம்பே வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எனது எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்: வானதி ஸ்ரீனிவாசன்