அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்த எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரையும் நியமித்து டொனால்ட் டிரம்ப் இன்று (நவம்பர் 13) உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்தஅமெரிக்க தேர்தலில் 312 தேர்தல் வாக்குகளை பெற்று பெரும்பான்மை வெற்றியுடன் 2வது முறையாக அதிபர் ஆகியுள்ளார் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். வரும் ஜனவரி மாதம் பதவியேற்க அவர் உள்ளார்.
அவரது தேர்தல் வெற்றிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியும், தொழிலதிபருமான விவேக் ராமசாமி கடுமையாக உழைத்தனர். அவரது வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு இருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் டிரம்ப் ஏற்கெனவே கூறியபடி, எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவருக்கும் தனது ஆட்சியில் அரசின் செயல்திறன் துறையை (“DOGE”) வழிநடத்துவார்கள் என அவர் இன்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் அங்கீகரிக்கப்படாத நிறுவனமாக உள்ளது.
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமியுடன் இணைந்து எலோன் மஸ்க் இருவரும் அரசாங்கத் திறன் துறைக்கு தலைமை தாங்குவர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைக்கவும், அமெரிக்காவைக் காப்பாற்றவும் வழிவகுப்பார்கள்.
குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் “DOGE” இன் நோக்கங்களைப் பற்றி மிக நீண்ட காலமாக கனவு கண்டுள்ளனர். இந்த வகையான கடுமையான மாற்றத்தை ஏற்படுத்த, அரசாங்கத்தின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்.
மேலும், பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கும், அரசாங்கத்திற்கு இதுவரை கண்டிராத ஒரு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவதற்கும், வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் கூட்டாளியாக இருக்கும்.
எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வழிநடத்துவார்கள். அவர்களின் பணி ஜூலை 4, 2026 இல் முடிவடையும்.
அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் செயல்படும் சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாகச் செய்வார்கள்.
முக்கியமாக, எங்களின் வருடாந்த $6.5 டிரில்லியன் டாலர்கள் அரசாங்க செலவினங்கள் முழுவதும் இருக்கும் பெரும் கழிவுகள் மற்றும் மோசடிகளை நாங்கள் வெளியேற்றுவோம்.
நமது பொருளாதாரத்தை விடுவிக்கவும், “நாம் மக்களுக்கு” அமெரிக்க அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்யவும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். அவர்களின் பணி 2026, ஜூலை 4ஆம் தேதி முடிவடையும்.
அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் ஒரு சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திராவிடம் – அம்பேத்கரின் பார்வை!
இன்றும் கனமழை தொடருமா? – பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்!