அமெரிக்கா நாட்டின் அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது.
உலகின் சக்தி வாய்ந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது.
இதனையடுத்து அந்நாட்டு சட்டப்படி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே இன்று தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரைப் போட்டியிடும் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸுக்கும், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்காவில் பல நேர மண்டலங்கள் (Time Zone) உள்ளதால், அதற்கேற்றவாறு ஜனாதிபதிக்கான தேர்தல் வெவ்வேறு நேரத்தில் ஆரம்பிக்கும்.
அதன்படி அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் சில மாகாணங்களில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய நாளை காலை 6 மணிக்கு நிறைவடையும். இந்த தேர்தலின் முடிவை இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு மேல் நாம் எதிர்பார்க்கலாம்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சிறுமி மீது கணவர் ஆசை: பணிப்பெண்ணின் மார்பில் அயர்ன்பாக்சால் சூடு வைத்த பெண்!
2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக்? எந்த நகரத்துக்கு முன்னுரிமை?
அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் : சாதனை படைப்பாரா கமலா…. கணிப்பை மாற்றுவாரா டிரம்ப்?