த்ரிஷாவை தவிர வேறு யார்? விஜய்க்கு திவ்யா சத்யராஜ் கேள்வி!

Published On:

| By Selvam

நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அண்மையில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். trisha vijay dhivya sathyaraj

திமுகவை தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அரசியலில் அவரது அடுத்த இலக்குகள் குறித்து மின்னம்பலம் சார்பாக இணை ஆசிரியர் கலைச்செல்வி சரவணன் அவரிடம் உரையாடினார். trisha vijay dhivya sathyaraj

அந்த உரையாடலின் முக்கிய பகுதிகள் இதோ…

அரசியலுக்கு வரவேண்டும் என்று யாராவது உங்களை அணுகினார்களா?

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது என்ஜிஓ-க்களில் தன்னார்வலராக பணியாற்றியுள்ளேன். பின் என்.ஜி.ஓ. நடத்தி வந்தேன். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் இங்கிருந்தே உதவிப் பொருட்களை அனுப்பினோம். அதனால், சிறு வயதில் இருந்தே மக்கள் பணி செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். நான் அப்போதே இதை என் பெற்றோரிடம் தெரிவித்திருந்தேன். ஆனாலும் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், நான் அரசியலுக்கு வர தாமதமாகிவிட்டது. இந்த முடிவு என் சொந்த முடிவு.

திமுகவை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

நான் ஊட்டச்சத்து நிபுணராக ஒரு தனியார் க்ளினிக்கில் பணியை தொடங்கினேன். பிறகு நானே தனியாக க்ளினிக் தொடங்கினேன். ஊட்டச்சத்து நிபுணர் என்பதால், எப்போதுமே ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பேன். அந்த வகையில் இப்போதைய அரசியல் கட்சிகளில் திமுகதான் தனி மனித, சமூக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. அதற்கு உதாரணம் முதல்வரின் காலை உணவு திட்டம். trisha vijay dhivya sathyaraj

அதேபோல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. அதற்கு உதாரணம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். மேலும் திமுக அனைத்து மதங்களுக்கும் மரியாதை கொடுக்கும் கட்சி. அதனால் திமுகவை தேர்ந்தெடுத்தேன். trisha vijay dhivya sathyaraj

உங்களுடைய தந்தை சத்யராஜ் ஒரு பெரியாரிஸ்ட். நீங்கள் தேர்தல் அரசியலில் நுழைந்திருக்கிறீர்களே?

நானும் பெரியாரிஸ்ட் தான். பெரியார் கொள்கைகளில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. தேர்தலில் வெல்வதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. திமுகவில் சேர்ந்தபோது எனக்கு பதவி கொடுங்கள் என்று நான் கேட்கவில்லை.

சென்னை மேயர் பிரியாவின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் நான் தான் அடுத்த மேயர் என பல மீம்ஸ்கள் வந்தன. ஆனால், தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனாலும் திமுக தலைமை எனக்கு இடும் கட்டளை எதுவாக இருந்தாலும் அதை ஏற்று நிறைவேற்றுவேன். divya sathyaraj interview in

பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

பெரியாரைப் பற்றி யார் பேசினாலும் அதில் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கு திமுகவில் இருந்து பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

விஜய்யின் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சவாலாக இருக்குமா? trisha vijay dhivya sathyaraj

நிச்சயமாக இல்லை. விஜய் இன்னும் மக்கள் பணி செய்யவே ஆரம்பிக்கவில்லை என்று நான் கருதுகிறேன். அவர் அரசியலில் இருந்து தான் மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியலில் இல்லை என்றாலும் மக்கள் பணி செய்யலாம். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும். divya sathyaraj interview in

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று விஜய் அண்ணா சொல்லி வருகிறார். அரசியலில் அல்ல, இத்தனை ஆண்டுகளாக அவர் இருந்த சினிமா துறையில் இருந்தே ஒரு கேள்வி கேட்கிறேன். சமீபத்தில் வெளியான எந்த ஒரு விஜய் அண்ணா படத்திலாவது ஒரு தமிழ் பெண் ஹீரோயினாக நடித்திருக்கிறார்களா? எல்லா விஜய் படங்களிலும் வட நாட்டில் இருந்து மெழுகு பொம்மை மாதிரியான பெண்கள் தான் நடிக்கிறார்கள்.

அவர் நினைத்திருந்தால் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். பிரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி, வாணி போஜன் என பல தமிழ் நடிகைகள் நல்லபடியாக நடிக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு ஒரு வேலை வாய்ப்பு என்ற வகையிலாவது விஜய் படங்களில் வாய்ப்பு கிடைத்ததா? த்ரிஷாவை தவிர வேறு எந்த தமிழ் நடிகையும் விஜய் அண்ணா படங்களில் சமீபத்தில் நான் பார்க்கவில்லை. இயக்குனர், தயாரிப்பாளர்கள் எல்லாம் விஜய் பேச்சை கேட்கும் அளவுக்கு செல்வாக்கான ஹீரோ விஜய். ஆனால் அவர் தமிழ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே?

அரசியலில் உங்களுடைய இலக்கு என்ன?

தமிழக மக்களின் ஆரோக்கியத்திற்கும், உடல் நலத்திற்கும் திமுகவுடன் சேர்ந்து நான் கடுமையாக உழைப்பேன். அது தான் என்னுடைய இலக்கு.

2026 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு இருக்கிறதா?

தலைமை என்ன முடிவு செய்கிறார்களோ அதனை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.

தந்தை உங்களுக்கு கொடுத்த அட்வைஸ் என்ன?

அரசியலுக்கு வருவதற்கு ஆர்வம் இருக்கிறது என்று முன்பே எனது பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் கொஞ்சம் பயந்தார்கள். என்னுடைய நேர்மை, கடினமான பணிகள் குறித்து அவர்களுக்கு தெரியும். அதனால், அரசியலுக்கு செல்லும் முடிவை ஏற்றுக்கொண்டார்கள். கடினமாக உழைக்க வேண்டும், மக்கள் பணி செய்ய வேண்டும் என்று தந்தை எனக்கு அட்வைஸ் செய்தார். divya sathyaraj interview in

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel