திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலையிலும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி முன்னிலையிலும் உள்ளது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று (மார்ச் 2) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மதியம் 1 மணி நிலவரப்படி, திரிபுரா மாநிலத்தில் பாஜக 33 தொகுதிகளில் முன்னிலையும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளிலும், திப்ரா மோதா கட்சி 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
நாகாலாந்து தேர்தலில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, பாஜக கூட்டணி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், நாகா மக்கள் கட்சி 3 தொகுதிகளிலும் மற்றவை 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேகாலயா தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 21 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 9 இடங்களிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், பாஜக 5, திரிணாமுல் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் மற்றவை 11 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
செல்வம்
பணநாயகம் வென்றுவிட்டது : அதிருப்தியில் கிளம்பிய அதிமுக வேட்பாளர்!
“தேர்தல் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை”: இளங்கோவன்
பாஜக தனித்து எங்கு நின்றாலும் ஆட்சிக்கு வர இயலாது….. கூட்டணி ஆதரவினால் மட்டுமே… குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரமுடியும்… இது பாஜக வின் நிலை