திரிபுரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 16) காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் ஆளும் பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கூட்டணி மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பாஜக 55 தொகுதிகளிலும், திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
28.13 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட திரிபுராவில், 259 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவானது மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இன்று காலை 6 மணி முதல் மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 31 ஆயிரம் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 25 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3337 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 28 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கலர்ஃபுல் லெமன் ரைஸ்!