திரிபுரா சட்டசபை தேர்தலில் 81.10% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்டசபை தொகுதிக்கு இன்று (பிப்ரவரி 16 ) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இந்தத் தேர்தலில் 28.14 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்து 233 என்றும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 99 ஆயிரத்து 289 என்றும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 62 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த தேர்தலில் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், 81.10% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கபட உள்ளது.
இந்நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ராமர் பால வழக்கு: அரசியல் சாசன அமர்வில் விசாரணை!
நானியுடன் டான்ஸ் ஆடிய சந்தோஷ் நாராயணன்