பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாஜக ஓபிசி அணியின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்தவர் திருச்சி சூர்யா. இவரும் பாஜக சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் டெய்சி சரணும் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த ஆபாச ஆடியோ வெளியான விவகாரம் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன்முடிவில், நாங்கள் இருவரும் அக்கா- தம்பியாக எங்களது உறவை தொடர்கிறோம் என்று அறிவித்தனர்.
இந்நிலையில் திருச்சி சூர்யாவை சஸ்பெண்ட் செய்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.
இந்தச்சூழலில் பாஜக உடனான தனது உறவை முடித்துக்கொள்வதாகத் திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (டிசம்பர் 6) அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கட்சித் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவைப் போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
அதீத பக்தி: யானை சிலைக்கு அடியில் சிக்கிய பக்தர்!
பாஜகவில் இருந்து பாமக திரும்பும் முன்னாள் எம்.எல்.ஏ.
வெளில வந்தா கழுவி ஊத்தனும் சும்மா தொட்டுக்க தொடைச்சிக்க பேசக்கூடாது.