trichy siva says parliament manipur

“எதிர்க்கட்சி தலைவரை நாடாளுமன்றத்தில் பாஜக பேசவிடுவதில்லை” – திருச்சி சிவா

அரசியல்

எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் பேச எழுந்தாலே ஆளும்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இதனால் அவை நடவடிககைகள் முடங்கியுள்ளது.

இந்தநிலையில் இன்று (ஜூலை 31) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “நாடாளுமன்றத்தில் 267-வது விதியின் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம். அதன்படி நாள் முழுவதும் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும். பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து அறிக்கை தர வேண்டும்.

ஆனால் மத்திய அரசு 176-வது விதியின் கீழ் விவாதிக்க தயாராக உள்ளோம் என்று கூறுகிறார்கள். அதன்படி 2.30 மணி நேரம் மட்டுமே விவாதிக்க முடியும். விவாதம் முடிந்த பிறகு அமைச்சர்கள் விளக்கம் தருவதில்லை.

எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் பேச எழுந்தாலே ஆளும் கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும். அமளிக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று சொல்வது உண்மையல்ல.

ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றம் உச்சகட்ட அதிகாரம் படைத்தது. அரசு நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தினமும் அலுவலகத்திற்கு வருகிறார். ஆனால் இரு அவைகளுக்கும் வருவதில்லை. இதற்கு முன்பு இருந்த பிரதமர்கள் தனி நபர் தீர்மானத்தின் போது அவைக்கு வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

மணிப்பூர் சம்பவம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

செப்டம்பர் 15க்கு பிறகு பயிரிடக்கூடாது : நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *