சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி எஸ்.பி.வருண் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை, மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது காவல்துறையை குறிப்பிட்டும் பேசினார்.

எஸ்.பி, ஏசி, டிசி என ஐபிஎஸ் படித்துவிட்டு வந்து நான் யாரிடம் பேசுகிறேன், எங்கு போகிறேன், எங்கு சிறுநீர் கழிக்கிறேன் என என்னை கண்காணிப்பதே வேலை என கூறி தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார்,

“பொதுமேடையில் பேசியிருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் இதுபோன்ற பேச்சுகளை சகித்துகொள்ளமாட்டார்கள்.

நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் அவருக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.

அவரது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவரை நீதிமன்றத்தில் சட்டத்தின் முன் நிற்க வைப்பேன். எனக்கு ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்கள் மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், திருச்சி சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட போது, சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார் என்றும் சாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்றும் சீமான் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Olympic 2024: த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்ற இந்தியா!

வயநாடு நிலச்சரிவு: பிரதமரிடம் அறிக்கை கொடுத்த கேரள அமைச்சர்!

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts