கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.94கோடி அளவில் உயர்மட்ட பாலத் திட்டம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் எ.வே.வேலு அளித்த பேட்டியில், ”திருச்சி உன்னியூர் – கரூர் நெருப்பூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி 93 கோடி ரூபாய் அளவில் நடைபெற்று வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரியை இணைக்கும் பாலத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.
கடந்த ஆட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட அரிஸ்டோ பாலம் தொடர்பாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டி முடிக்கப்பட்டது. அதனை சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார்.
இடையாற்றுமங்கலம் மற்றும் கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.94கோடி மதிப்பீடு செய்யபட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் கோரப்பட உள்ளது என்றார்.
திருச்சியில் மெட்ரோ
கோவை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மெட்ரோ ரயில் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதனை முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் விடுத்த கோரிக்கையின்படி திருச்சியில் கட்ட தயார் நிலையில் உள்ள 3 உயர்மட்ட பால பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜம்முவில் அடித்து செல்லப்பட்ட தேசிய நெடுஞ்சாலை: துண்டிக்கப்பட்ட ஸ்ரீநகர்!
ரயிலில் ஏசி வகுப்பு கட்டணம் குறைப்பு: ரயில்வே வாரியம்!
400 டிரான்ஸ் பார்மர் கதை இல்ல தான சார்..மத்தியரசை நொட்டியது போதும்..ஆக்கபூர்வமான வேலைகளை மட்டும் வேக படுத்துங்கள்..!