இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!

Published On:

| By Selvam

tamilnadu India's second economic state

இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். tamilnadu India’s second economic state

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 7) துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிலும் குறிப்பாக பல துறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் 45,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. ஆட்டோமொபைல், டயர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

மின்னணு பொருட்கள் உற்பத்தில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகம்  30 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. நடப்பு நிதியாண்டில் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

மின் வாகனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் 70 சதவிகித இருசக்கர மின்வாகனங்கள் மற்றும் 40 சதவிகித நான்கு சக்கர வாகனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தோல் தயாரிப்பு உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக உள்ளது. இங்குள்ள நகரங்கள் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.

குறிப்பாக கல்வி, சுகாதார கட்டமைப்புகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். இங்கு வசிப்பவர்களில் 250 பேருக்கு ஒரு மருத்துவர்கள் உள்ளனர். இது ஸ்கேண்டிநேவியன் நாட்டுடன் ஒப்பிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1,50,000 பொறியாளர்களை நாங்கள் உருவாக்குகிறோம்.

இந்தியாவில் உள்ள 50 தலைசிறந்த கல்லூரிகளில் தமிழகத்தில் 22 கல்லூரிகள் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த மாநாடு தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிகளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

டெல்லி குடியரசு தின விழாவில் கோவை பழங்குடியின தம்பதி: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!

அயோத்தி ராமர் கோவில் போறீங்களா? – சேகர் பாபு முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

அனிமல் படத்தின் வெற்றி ஆபத்தானது: எழுத்தாளர் ஜாவித் அக்தர் விமர்சனம்!

tamilnadu India’s second economic state

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share