தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்: யார் யாருக்கு என்ன இலாகா?

அரசியல்

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக இன்று (மே 11) பதவியேற்ற மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு நமது மின்னம்பலத்தில் முன்னரே கூறியபடி தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல அமைச்சரவையிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையும், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

அமைச்சராக பதவியேற்ற மகன்: ஆசையை தெரிவித்த டி.ஆர்.பாலு

”டி.ஆர்.பி ராஜா எனும் நான்”: அமைச்சராக பதவியேற்றார்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0