transport workers stage protest pallavan illam

பஸ் ஸ்டிரைக்: பல்லவன் இல்லத்தில் முற்றுகை போராட்டம்!

அரசியல்

சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில், சிஐடியு தொழிற்சங்கத்தினர் இன்று (ஜனவரி 10) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலிப்பணியிடங்கள் நியமனம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளான இன்றும் தமிழகத்தின் பல இடங்களிலும் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து பணிமனை முன்பாக தொழிற்சங்க ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில், சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு தொழிலாளர்களை வஞ்சிப்பதாகவும், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரசொலி பஞ்சமி நில விவகாரம்: விசாரணையை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு!

தங்கம் விலையில் மாற்றமா?: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0