போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் சஸ்பெண்ட்!

அரசியல்

ஊழல் வழக்கில் சிக்கி நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் போக்குவரத்துத் துறை ஆணையரகம் செயல்பட்டு வருகிறது. இங்கு போக்குவரத்துத் துறை துணை ஆணையராக நடராஜன் பணியாற்றி வந்தார். இவரது அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு அதிகளவில் லஞ்சம் வாங்குவதாகப் புகார்கள் எழுந்தன.

இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் சுமார் 35 லட்சம் ரூபாய் சிக்கியது. துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு ஊழியர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இந்தசூழலில் சென்னையில் பணியாற்றி வந்த நடராஜன் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடுமையான புகார்களை எதிர்கொண்ட நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டது பல கேள்விகளுக்கு வித்திட்டது.
இதுதொடர்பாக நாம் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாக விஜிலென்ஸ் போலீசார் உள்துறைச் செயலாளருக்கு தனியாக நோட் போட்டுள்ளனர். அதற்கு முன்பாக போக்குவரத்து துறைக்குள் மேற்கொள்ளப்படும் துறை ரீதியான நடவடிக்கை இது. சஸ்பெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுவதற்கான  வேலைகள் நடந்து வருகின்றன.

அதன்படி, நேற்று (ஜூலை 25) அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரியா

+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *