ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று(ஜூன் 2) ரயில் விபத்து ஏற்பட்டது.
தற்போது வரை இந்த ரயில் விபத்தில் 288 பேர் பலியாகியுள்ளனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கோர விபத்தை அடுத்து ஒடிசா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் இன்று(ஜூன் 3) துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
முன்னதாக இந்த கோர விபத்து நடைபெற்ற இடத்திற்கு தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி ஆகியோர் அடங்கிய குழுவை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரயில் விபத்து: தமிழ்நாட்டில் இன்று துக்க நாள் அனுசரிப்பு!
ஒடிசா ரயில் விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
ரயில் விபத்து : ரத்தம் கொடுக்க நள்ளிரவில் குவிந்த இளைஞர்கள்!