நீலகிரி: இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய ஆ.ராசாவிடம் கோரிக்கை!

அரசியல்

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டதால், உள்ளூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நீலகிரி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நீலகிரி எம்.பி-யான ஆ.ராசாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.  கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும் இ-பாஸ் நடைமுறையை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையால் உள்ளூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என நீலகிரி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் முறையிட்டு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் கேம்சந்த், செயலாளர் முகமது ரபீக் தலைமையில் சங்கத்தினர் நீலகிரி எம்.பி ஆ.ராசாவை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், “இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை முதன்மையாக நம்பியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீலகிரியில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. மாவட்ட வளர்ச்சியும் தடைபடுகிறது.

உள்ளூர் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த வணிகத்தில் 45 சதவிகிதத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் இழப்பு மற்றும் சமூக பொருளாதார உறுதியற்ற தன்மை அதிகமாகியுள்ளது.

இ-பாஸ் முறையின் அழிவுகரமான தாக்கத்தை நிவர்த்தி செய்ய முழுமையான தாக்க மதிப்பீடுகளை உள்ளூர் மக்கள் ஈடுபாட்டுடன் நடத்த வேண்டும். நிலையான தீர்வுகளை உருவாக்க வேண்டும்.

அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வைப் புறக்கணிக்கும் விதிவிலக்குக் கொள்கைகளால் இ-பாஸ் முறை தீங்கானது.

இந்த நெருக்கடியைத் தவிர்க்க, இ-பாஸ் முறையை மறுபரிசீலனை செய்து, நிலையான, உள்ளடக்கிய தீர்வுகளை உருவாக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பைனாப்பிள் பூந்தி

இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது? – அப்டேட் குமாரு

சாம்சங் போராட்டம் முடிந்ததா? இல்லையா? – தொடரும் சர்ச்சை!

அமித்ஷாவை சந்தித்தாரா ஒபிஎஸ்? – டெல்லி பயண பின்னணி இதுதான்!

‘தெறி’ இந்தி ரீமேக் : கேமியோ ரோலில் சல்மான் கான்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0