12 மணி நேர வேலை- தொழிற்சங்கக் கூட்டம்: தலைகாட்டாத திமுக தொழிற்சங்கம்!

அரசியல்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 21-ம் தேதி எட்டு மணி நேர வேலை நேரத்தை அதிகரித்து 12 மணி நேரமாக ஆக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வெளிநடப்பு செய்தனர்.

பாஜக, திமுகவை தவிர தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்கிற நிலையில்…

இன்று (ஏப்ரல் 23) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்த சட்ட திருத்தம் குறித்து விவாதிப்பதற்கும் தொழிற்சங்கங்களின் அடுத்த கட்ட போராட்டங்கள் பற்றி முடிவு செய்வதற்கும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஏ. ஐ. டி. யு. சி. சார்பாக டி. எம். மூர்த்தி, காசி விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சி.ஐ.டி.யு. சார்பாக ஜி.சுகுமாரன், திருச்செல்வனும் எச். எம். எஸ். சார்பாக சுப்பிரமணியனும்,

ஐ. என். டி. யு .சி. சார்பாக சேவியர் பாண்டியராஜ் ஆகியோரும் ஏ.ஐ.யு.டி. யு. சி. சார்பாக சிவக்குமார், சடையாண்டி ஆகியோரும் மற்றும் பல தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF) கலந்து கொள்ளவில்லை.

நாளை ஏப்ரல் 24ஆம் தேதி இது தொடர்பாக அரசு ஆலோசனைக் கூட்டத்திற்கு தொழிற்சங்கங்களை அழைத்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று கூடிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டங்களை வகுத்து முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆலை வாயில்களில் கூட்டம்- ஆர்ப்பாட்டம்,  27 ஆம் தேதி வேலை நிறுத்த முன்னறிவிப்பு வழங்குதல்,  28ஆம் தேதி கருப்பு பட்டை அணிதல்- மதிய உணவை புறக்கணித்தல்,

மே 4, 5 தேதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம், மே 9ஆம் தேதி மாவட்ட தலைநகரங்கள்- தொழில் மையங்களில் ஆர்ப்பாட்டம்,  மே 12ஆம் தேதி வேலை நிறுத்தம் என்று போராட்ட வகைகளை முடிவு செய்து கையெழுத்திட்டு அறிவித்துள்ளனர்.

Trade unions meeting

திமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளாதது பற்றி நம்மிடம் பேசிய இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,

திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவுக்கும் இந்த சட்ட திருத்தத்தில் உடன்பாடு இருக்காது என்றே கருதுகிறோம்.  அவர்களும் தங்கள் கட்சி தலைமையிடமும் அரசிடமும் இது பற்றி தெரிவித்துள்ளார்கள்.

ஆனாலும் அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி விட்ட நிலையில் கட்சியா, தொழிற்சங்கமா என்ற ஊசலாட்டத்தில் திமுக தொழிற்சங்கத்தினர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளனர்.

நாளை அரசு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தொமுச பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம். அப்போது அவர்களின் நிலைப்பாடு என்னவென்று வெளிப்படையாகத் தெரிய வரும்” என்றனர்.

வேந்தன்

ஸ்டாலின் வெளிநாடு பயணமா?

ஓபிஎஸ் மாநாடு: திகுதிகு ஏற்பாடுகள்… திமுக போடும் கணக்கு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *