நீட் தேர்வு பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக, அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (ஜூலை 22) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) முதல் நடைபெற உள்ள நிலையில், இன்று (ஜூன் 21) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை குழு தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு,
“நீட் தேர்வு பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.
மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி முறையாக வழங்கப்படுவதில்லை. இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்ற இரு அவை கொண்ட உறுப்பினர்கள் குழு தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அதேபோல 60:40 என்ற விகிதத்தில் மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகிறார்கள். அந்த பணம் முழுவதுமாக மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு கிடைப்பதில்லை.
குறிப்பாக சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை.
மேலும், தேசிய பேரிடர் நிதிக்கும் நிதி ஒதுக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவனைக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு பிரச்சனை அதிகரித்து வருகிறது. அதனால் மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி மதிப்பதில்லை. இதனால் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் மழை பெய்யுமா? வெதர் ரிப்போர்ட் இதோ!
மீண்டும் ஆர்.சி.பி அணிக்கு கேப்டனாக திரும்பும் நட்சத்திர வீரர்!