தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேர் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் 6கோடியே 18லட்சத்து 26ஆயிரத்து, 182 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அவர்களில் 3.03 கோடி ஆண்களும், 3.14 கோடி பெண்களும், 7,758 மூன்றாம் பாலினத்தவரும் அடங்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அதற்கான சிறப்பு முகாம்களும், விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த டிசம்பர் 8-ந் தேதி நிறைவடைந்தன.
இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதனை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்ய பிரதா சாகு இன்று(ஜனவரி 5)வெளியிட்டார்.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் – 3, 04,89, 066 பேர், பெண் வாக்காளர்கள் – 3,15,43,286 பேர், மூன்றாம் பாலினத்தவர் 8027 பேர்.
அதிக வாக்காளர் உள்ள தொகுதி, சோழிங்கநல்லூர் – 6,66,295, குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி துறைமுகம் – 1,070, 125. வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் – 3,310, 18, 19 வயதுக்குட்பட்டவர்கள் – 4,66,374 பேர் ஆவர்.
வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்க – elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் இனியும் பெயர் சேர்ப்பது மற்றும் திருத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கலை.ரா
நீலகிரியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்!
சிதம்பரம் நடராஜர் தேரோட்டம்: விண்ணை முட்டிய சிவ சிவ கோஷம்!