பட்ஜெட் தாக்கல்!
மத்திய அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார். top10 news budget to milk price hike
ஓலா, உபர் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஓலா, உபர் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஆட்டோ, கேப் ஓட்டுநர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தனியார் பால் விலை உயர்கிறது! top10 news budget to milk price hike
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
ஜிபே செயல்படாது உஷார்!
யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் இன்று முதல் செயல்படாது என்று என்பிசிஐ எனும் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் புத்தகத் திருவிழா ஆரம்பம்!
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நூலகத்துறை இணைந்து நடத்தும் நாமக்கல் புத்தகத்திருவிழா, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
சச்சினுக்கு மரியாதை!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
எமகாதகி பர்ஸ்ட் சிங்கிள்!
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எமகாதகி’ திரைப்படத்தின் ’உயிர் கோட்டுல’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகிறது.
எமக்குத் தொழில் ரொமான்ஸ் ரிலீஸ்!
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமான “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” இன்று முதல் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
தெற்கு கேரளம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.