மீண்டும் 4 மணிக்கு ஆஜராக சம்மன்!
அமைச்சர் பொன்முடி இன்று (ஜூலை 18) மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அமலாக்கதுறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
பல்கலை பட்டமளிப்பு விழா!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்கும் நிலையில், இணை வேந்தரும், உயர்கல்வி அமைச்சருமான பொன்முடி பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாள்!
மதராஸ் மாகாணத்திற்கு 1967ஆம் ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதன் நினைவாக இன்று அரசு சார்பில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது.
முன்னாள் முதல்வர் மரணம்!
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டம்!
பெங்களூருவில் இன்று 2வது நாளாக காலை 11 மணிக்கு நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முதல்வருக்காக கருப்பு சட்டை!
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்று கருப்பு சட்டை அணிய உள்ளனர்.
டெல்லி செல்கிறார் எடப்பாடி
டெல்லியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
கள்ளக்குறிச்சியில் உதயநிதி
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் இன்று நடக்கும் விழாவில், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
தமிழ்நாட்டில் இன்று 423 ஆவது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சதுரகிரி செல்ல தடை!
சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
“பொன்முடியிடம் மனிதாபிமானமற்ற முறையில் ED விசாரணை” – வழக்கறிஞர் சரவணன்
சென்னை சைதாப்பேட்டை பொன்முடி இல்லத்தில் ED சோதனை நிறைவு!