அவசர கால ஊர்திகள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 22) சென்னை, கீழ்ப்பாக்கம், மனநல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 75 அவசரகால ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கனக்ட் திரைப்படம் வெளியீடு!
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் கனக்ட் திரைப்படம் இன்று வெளியாகிறது.
பண்டிகை கால சிறப்பு ரயில்!
சென்னை – திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
இந்தியா, வங்கதேசம் மோதல்!
இந்தியா, வங்கதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று தொடங்குகிறது.
வைகுண்ட ஏகாதசி ஆன்லைன் டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 214-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இலங்கை கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
ராகுல் நடைபயணம்!
ராகுல் காந்தி இன்று ஒற்றுமை நடைபயணம் 105-வது நாள் ஹரியானா மாநிலம் கிராமின் பகுதியில் துவங்கி அம்பேத்கர் செளக் பகுதியில் நிறைவு செய்கிறார்.
இசை வெளியீட்டு விழா!
1982 அன்பரசின் காதல் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது.
சேலம் இரும்பாலை பிரச்சினை: 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!