டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மழை அப்டேட்!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.

மத்திய அரசு ஆலோசனை!

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

ராகுல் காந்தி நடைபயணம்!

நூறு நாட்களை கடந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று ஹரியானா மாநிலம் உதைப்பூர் அருகே பதன் பகுதியில் இருந்து தொடங்கியுள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை!

214 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி ஈரோட்டில் இரண்டு பேர், சென்னை, செங்கல்பட்டு, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 15 வது அமர்வு இன்று நடைபெறுகிறது.

உள்ளூர் விடுமுறை!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம்!

விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

காலியிடங்களை மூன்று ஆண்டுகளில்  நான்கு தவணைகளில்  நிரப்பலாம்: ராமதாஸ்

கிச்சன் கீர்த்தனா : காரைக்குடி காடை ஃப்ரை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.