டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

இலங்கை தமிழர்களுக்கு இல்லங்கள்!

இலங்கை தமிழர்களுக்கு ரூ.17.17 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) காணொளிக் காட்சி வாயிலாக வழங்குகிறார். நாளை நடைபெறும் முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் செல்கிறார். அங்கிருந்தபடியே இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக 321 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

உஸ்பெகிஸ்தான் செல்லும் மோடி

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் செப்டம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடக்கும், எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 14) வெளிநாடு புறப்படுகிறார்.

சிறார்களுக்கு சிற்பி திட்டம்!

சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ என்னும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) தொடங்கி வைக்கிறார்.

ராகுல் காந்தி நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 14) 8-வது நாள் நடைபயணத்தை கேரள மாநிலம் நவிக்குளம் பகுதி ஜங்ஷன் பகுதியில் தொடங்கி, பள்ளிமுக்கு என்ற பகுதியில் நிறைவு செய்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று (செப்டம்பர் 14) 116-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 4,811 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

மேற்கு திசைக் காற்றின் மேக வேறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 14) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அரசியல் கட்சிகளுக்கு தடை!

பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்சிகள் தேர்தல் சின்னங்கள் உத்தரவு 1968-ன் பயன்களை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அட்வைஸ்!

வெந்து தணிந்தது காடு படத்தை காலை 5 மணி காட்சி பார்க்க செல்கிறவர்கள் முதல்நாள் இரவு நன்றகாகத் தூங்கிவிட்டு வரவும், ஏனென்றால் கதை மற்றும் கதாப்பாத்திரத்தின் ஒட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது

சென்னை, மதுரை, திருச்சியில் தடுப்பணைகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *