சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா!
தீவுத்திடலில் இன்று (ஜனவரி 13) சென்னை சங்கமம்– நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இவ்விழாவை தொடங்கி வைக்கிறார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஏற்கனவே நடைபெற்ற விவாதங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசுகிறார்.
டெல்லி செல்லும் ஆளுநர்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரு நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார்.
பொங்கல் பரிசு!
நேற்று வரை பொங்கல் பரிசு பெற கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்கள் இன்று தங்கள் பகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் இன்று ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
சமத்துவ பொங்கல்!
திருச்சி, திருவாரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஹாக்கி போட்டி!
ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரத்தில் 15 ஆவது ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது.
குதிரை பந்தயம்!
மெட்ராஸ் ரேஸ் கிளப் 246 ஆவது ஆண்டு நினைவுக் கோப்பை குதிரைப் பந்தயம் இன்று தொடங்குகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 237வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கலங்கரை விளக்கை பார்க்க அனுமதி!
நான்காண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரியில் உள்ள கலங்கரை விளக்கை சுற்றுலா பயணிகள் இன்று முதல் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு ஷாக் கொடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்
இந்தியா-இலங்கை: டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் போட்டியும் இந்தியா வசம்!
பத்திரிக்கையாளர் துரைபாரதி மறைவு: இதழியல் துறைக்கு இழப்பு – முதல்வர்