ஆளுநர் கலந்துரையாடல்!
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகளுடன் இன்று (மே 15) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.
அதிமுக மாநாடு!
தஞ்சை ஒரத்தநாட்டில் இன்று நடைபெற உள்ள அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார்.
நாதக ஆர்ப்பாட்டம்!
அரசு நெல் கொள்முதல் நிலையங்களைச் சீரமைக்கக் கோரி திட்டக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சட்டப்படிப்பு விண்ணப்பம்!
தமிழ்நாட்டு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 359வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் டிரெய்லர்!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
கழுவேத்திமூர்க்கன் பாடல்!
அருள்நிதி நடித்துள்ள கழுவேத்திமூர்க்கன் படத்தின் “அவ கண்ண பாத்தா” என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
ஐபிஎல் போட்டி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 62வது லீக் போட்டியில் குஜராத் – கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
கொரோனா அப்டேட்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 462 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெறுப்பரசியலை வேரறுக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றி! i
கிச்சன் கீர்த்தனா: கேப்பேஜ் ரோல் ஸ்நாக்ஸ்