தொழிலாளர்களை சந்திக்கும் மோடி
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் எழுத்தர்கள், பியூன் மற்றும் பிற தொழிலாளர்களை பிரதமர் மோடி இன்று (ஜூலை 18) சந்தித்து உரையாடுகிறார்.
நீதிபதிகள் பதவியேற்பு!
உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக ஆர்.மகாதேவன் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்கின்றனர்.
நீட் வழக்கு விசாரணை!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
எடப்பாடி ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பொள்ளாச்சி, நீலகிரி, கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
வாழை முதல் பாடல் ரிலீஸ்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள வாழை படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தரிசன டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாத ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் துவங்குகிறது.
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மோதல்!
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 122-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மைசூர் ரசம்
ஆடியவே தள்ளுபடி பண்ணியாச்சி : அப்டேட் குமாரு