மொஹரம் பண்டிகை!
இஸ்லாமியர்களின் தியாக திருநாளான மொஹரம் பண்டிகை இன்று (ஜூலை 17) கொண்டாடப்படுகிறது.
தியாகிகள் தினம்!
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்கிற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரது சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்படுகிறது.
சசிகலா தொண்டர்கள் சந்திப்பு!
அதிமுகவை ஒன்றிணைக்கும் வகையில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சசிகலா இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலாவதாக இன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்.
தங்கலான் பாடல் ரிலீஸ்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் இன்று வெளியாகிறது.
மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில்கள் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது.
விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக்!
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 122-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கென்யா – நைஜிரியா மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் கென்யா – நைஜிரியா அணிகள் மோதுகின்றன.
பேட்டரேப் பாடல் ரிலீஸ்!
எஸ்.ஜே.சினி இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பேட்டரேப் படத்தின் இரண்டாவது வீடியோ பாடல் இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காவிரி நதி நீர் விவகாரத்திற்கு ஸ்டாலின் கண்டனம்!