காலை உணவு திட்டம் விரிவாக்கம்!
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூலை 15) அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு!
கர்நாடகாவின் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு இன்று முதல் 8,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
எடப்பாடி ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மயிலாடுதுறை, நாகை, கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம்!
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
காமராஜர் பிறந்தநாள்!
முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
CLAT நுழைவுத்தேர்வு!
தேசிய சட்ட பல்கலைக்கழங்களில் சேர்வதற்கான CLAT நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.
சபரிமலை நடை திறப்பு!
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 120-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கென்யா – நைஜிரியா மோதல்!
இன்றைய டி20 கிரிக்கெட் போட்டியில் கென்யா – நைஜிரியா அணிகள் மோதுகின்றன.
INDvsZIM : தடுமாறிய ஜிம்பாவே… தொடரை கைப்பற்றியது இந்தியா!