அமித்ஷா மத்திய பிரதேசம் பயணம்!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எல்லை பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு ரேஞ்ச் வளாகத்தில் 11 லட்சம் மரங்கள் நடும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 14) கலந்து கொள்கிறார்.
அனைத்து கட்சி கூட்டம்!
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அம்மாநிலத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
பொக்கிஷ அறை திறப்பு!
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறை 39 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது.
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் ரத்து!
இன்று மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசை கச்சேரி!
இளையராஜா இசை கச்சேரி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி!
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் – அல்காரஸ் இன்று மோதுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 119-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் அனைத்தும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உருகுவே – கனடா மோதல்!
48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே – கனடா அணிகள் இன்று மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பனீரை எப்படிப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது?
என்ன ராஜேஷ்…ஜெயிச்சிட்டியா? 9 ஆவது ரவுண்டில் ஸ்டாலின் போட்ட போன்!